2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: ஐஸ்லாந்து

Editorial   / 2018 மார்ச் 11 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

கால்பந்தாட்ட உலக கிண்ணம், இவ்வாண்டு ஜூன் மாதம் ரஷ்யாயாவில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றும் அணிகளின் வரிசையில் குழு டியில் இடம்பிடித்துள்ள ஐஸ்லாந்து அணி பற்றி இப்பத்தி நோக்குகிறது.  

ஐஸ்லாந்து அணி முதற் தடவையாக கால்பந்தாட்டத் உலகக் கிண்ணத் தொடரில் கால்பதித்துள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் குறைந்த சனத்தொகை உள்ள நாடொன்று உலக கிண்ண தொடரில் பங்குபற்றுகிறது என்ற சாதனையோடு உலக கிண்ண தொடருக்கு தெரிவாகியுள்ளார்கள்.

இவர்கள் உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவானதே மிகப் பெரும் கொண்டாட்டமாக அந்நாட்டு அரசாங்கத்தாலும் மக்களாலும் கொண்டாடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசெம்பர் 31ஆம் திகதி இவர்களது சனத்தொகை 348,580. இந்தளவு சிறிய நாட்டிலிருந்து உலகக் கிண்ணம் வருவதென்பது மாபெரும் சாதனையே. இதற்கு முதலில் ட்ரினிடாட் அன்ட் டொபாகோ அணியே சிறிய நாடாக காணப்பட்டது. அவர்கள் 1,300,000 மக்கள் தொகையை கொண்ட நாடாக உலகக் கிண்ண தொடரில் விளையாடும்போது காணப்பட்டார்கள். உலகக் கிண்ணத் தொடரில் பங்குபற்றும் 78ஆவது நாடாக ஐஸ்லாந்து அணி தன்னை பதிவு செய்துள்ளது.

தொடர்ச்சியான 44 ஆண்டுகள் போராடி ஐஸ்லாந்து அணி இவ்வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளது.  1974ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இவர்கள் விளையாடி வருகிறார்கள்.  இவர்கள் தகுதிகாண் போட்டிகளில் பெற்றுக் கொண்ட வெற்றிகள் மற்றும் தோல்விகள் ஒரே மாதிரியாக இருந்து வந்தாலும், கடந்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் இம்முறை தகுதிகாண் போட்டிகளிலும் சிறப்பாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட அணியின் வளர்ச்சியே இம்முறை உலகக் கிண்ணம் வரை அவர்களை அழைத்து வந்துள்ளது. இவர்களது தரப்படுத்தல் கூட சிறப்பாகவே காணப்படுகிறது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இவ்வாண்டு பெப்ரவரி மாதத்துக்கான தரப்படுத்தலில் 18ஆவது இடத்தில் காணப்படுகிறது. ஐரோப்பிய அணிகளில் 12ஆவது இடத்தில் காணப்படுகிறது.

ஐரோப்பிய வலயத்திலிருந்து 13 அணிகள் தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்படும் நிலையில் இவர்கள் தெரிவானது கூட நியாயமானதே.

இவர்கள் முதற்தடவையாக 1954ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக விண்ணப்பித்தபோதும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனம் ஐஸ்லாந்து அணியின் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது.

அதன் பின்னர் 1958ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடியவர்கள் நான்கு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்தார்கள். அடுத்த மூன்று உலக கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இவர் பங்குபற்றியிருக்கவில்லை. 1974ஆம் ஆண்டு தகுதிகாண் போட்டிகளுக்காக களமிறங்கியவர்கள் ஆறு போட்டிகளிலும் தோல்விகளைச் சந்தித்தார்கள். ஆனால் அதன்பின்னர் நடைபெற்ற போட்டிகளில் குறைந்தது ஒரு வெற்றியையாவது ஒவ்வொரு தொடர்களிலும் பெற்றுள்ளார்கள். 2014ஆம் ஆண்டுக்கான தகுதிகாண் போட்டிகளில் கடுமையாக போராடியவர்கள் மயிரிழையில் வாய்ப்பை இழந்தார்கள். குழு நிலையில் இரண்டாமிடத்தை பெற்றவர்கள் இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்து உலகக் கிண்ண வாய்ப்பை பெற்றார்கள்.

ஐஸ்லாந்து அணி தகுதிகாண் போட்டிகளில் பெற்ற முடிவுகள்

 

1958       4              0              0              4              6              26

1974       6              0              0              6              2              29

1978       6              1              0              5              2              12

 1982      8              2              2              4              10           21

 1986      6              1              0              5              4              10

 1990      8              1              4              3              6              11

 1994      8              3              2              3              7              6

 1998      10           2              3              5              11           16

 2002      10           4              1              5              14           20

 2006      10           1              1              8              14           27

 2010      8              1              2              5              7              13

2014       12           5              3              4              17           17

(ஆண்டு, போட்டிகள், வெற்றி, சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், எதிரணி அடித்த கோல்கள்)

இந்தாண்டு தகுதிகாண் போட்டிகளிலேயே ஐஸ்லாந்து அணி   கூடுதல் வெற்றிகளைப் பெற்றுளது. இதன் காரணமாகவே ஐஸ்லாந்து அணி ஐரோப்பிய வலய குழு ஐ-இல் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. குரோஷியா, உக்ரேன், துருக்கி ஆகிய அணிகளை பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதன் காரணமாக குரோஷிய அணி தகுதிகாண் போட்டிகளில் விளையாடி உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஐஸ்லாந்து அணிக்கு ஓரளவு இலகுவான குழு கிடைத்தமையும் கூட அவர்களுக்கான அதிர்ஷ்டமாக மாறிப் போனது. ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பலமான அணிகள் மற்றைய குழுக்களில் இடம்பிடித்திருந்தன. அதுமட்டுமல்லாமல் இத்தாலி, நெதர்லாந்து போன்ற அணிகள் உலக கிண்ண வாய்ப்பை இழந்துள்ளன.

ஐரோப்பிய வலைய குழு ஐ முடிவுகள்

 

ஐஸ்லாந்து                   10           7              1              2              16           7              9              22          

குரேசியா                     10           6              2              2              15           4              11           20          

யுக்ரைன்                       10           5              2              3              13           9              4              17          

துருக்கி                           10           4              3              3              14           13           1              15          

பின்லாந்து                   10           2              3              5              9              13           -4            9             

கொசோவோ            10           0              1              9              3              24           -21          1

(நாடுகள், வெற்றி, சமநிலை, தோல்வி, புள்ளிகள், அடித்த கோல்கள், எதிரணி அடித்த கோல்கள்)

ஐஸ்லாந்து அணி உலக கிண்ணத்துக்கு தெரிவாகிவிட்டது. 32 அணிகளில் ஒன்று. இனி என்ன செய்யப்போகிறார்கள்? குழு டியில் இடம் பிடித்துள்ளார்கள். ஆர்ஜென்டீனா அணி பலமான அணியாக காணப்படுகிறது. ஆனால் இவர்களை இரண்டாவது பலமான அணியாக குறிப்பிடலாம். ஐரோப்பிய வலய தகுதிகாண் போட்டிகளில் இவர்கள் யாருக்கு தலையிடி கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் உலக கிண்ண தொடரலிலும் ஐஸ்லாந்து அணியுடன் இடம் பிடித்துள்ளார்கள்.  குரோஷிய அணியே அவ்வணி. குரோஷிய அணி தரப்படுத்தல்களில் 15ஆம் இடத்தில் காணப்படுகிறது. இவர்கள் தகுதிகாண்ண் போட்டிகளில் மோதிய போது தங்களது சொந்த நாடுகளில் வெற்றி பெற்றுளார்கள்.  இம்முறை பொது மைதானம். யார் வெல்லப்போகிறார்கள் என்பதில் அடுத்த சுற்று காணப்படுகிறது. 

இக்குழுவில் இடம்பிடித்துள்ள நைஜீரிய அணி நான்காவது அணி. இவர்கள் 52ஆம் இடத்தில் காணபப்டுகிறார்கள். எனவே இவர்களால் பெரியளவில் அச்சுறுத்தல் இல்லை என்ற நிலைக்கு வரலாம். எனவே முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கு தெரிவான ஐஸ்லாந்து அணி இரண்டாம் சுற்று வரை முன்னேறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இவர்கள் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டால் அடுத்த சுற்றில் பிரான்ஸ் அணியைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆகையால் இவர்கள் அதிகப்படியாக இரண்டாம் சுற்று வரை முன்னேறும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

பந்தயக்காரர்கள், ஐஸ்லாந்து அணியினர் உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவதற்கான 21ஆவது இட வாய்ப்பை வழங்கியுளார்கள்.  குரோஷிய அணிக்கு 11ஆவது இட வாய்ப்பையும், நைஜீரிய அணிக்கு 20ஆவது இட வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார்கள். எனவே அவர்களது கணிப்பில் ஐஸ்லாந்து அணி முதல் சுற்றுடன் வெளியேறுமென்பதும் குழு நிலையில் இறுதி இடத்தை பெறுவார்கள் என்பதுமாக காணப்படுகிறது.

ஐஸ்லாந்து அணி முதலாவது உலக கிண்ணத் தொடரில் விளையாடுகிறது. போதியளவு அனுபவமில்லை. மற்றைய அணிகள் உலக கிண்ண தொடரில் விளையாடிய அணிகள். இவற்றை காரணமாக வைத்து இந்த எதிர்வு கூறலை வழங்கியிருக்கலாம். சிறிய நாடாக இருந்த போதும் மிகப் பெரிய உயரம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஐஸ்லாந்து அணி, அவர்களால் முடிந்தளவு உயரத்தை தொடவும் பலமான அணிகளிடம் மோசமாக தொற்றுப் போகாமல் அச்சுறுத்தல் வழங்கக்கூடியவர்களாக சிறப்பாக விளையாடவும் வாழ்த்துக்களை கூறுவோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X