2022 ஜூலை 07, வியாழக்கிழமை

மடத்தடியில் மகா சங்காபிஷேகம்

Editorial   / 2022 மே 06 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் முதலாவது நவோத்ர சகஸ்ர சத மகா சங்காபிஷேகம் நேற்று (06) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம், ஏப்ரல் 6ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றமை அறிந்ததே.

கடந்த 29 நாட்களாக மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் 1008 சங்குகளுடன்  நேற்று 905) காலை  08 மணிக்கு   சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி,  முற்பகல் 11 மணியளவில் சங்காபிஷேகம் நடைபெற்றது.

சங்காபிஷேகத்தில் கலந்து கொள்ளும் அடியார்களுக்கு மீனாட்சி அம்மனின் திருவுருவப்படம் பொறித்த வர்ணப் படமொன்று, ஒஸ்கார் அமைப்பால் வழங்கப்பட்டது .

அதேவேளை  இரண்டாம் கட்ட பணிநயப்பு விழா  ஆலயத்தில் நடைபெற்றது. (படங்களும் தகவலும் சகா)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .