2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 01

Editorial   / 2020 மே 01 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

1884: ஐக்கிய அமெரிக்காவில், எட்டு மணிநேர வேலைநாள் வேண்டி, பொது அறிவிப்பு வெளியானது.

1886: ஐக்கிய அமெரிக்காவில் 8 மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி, வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள், பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1900: ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.

1915: லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள், அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில், 1,198 பேர் உயிரிழந்தனர்.

1925: சீனாவில் அனைத்துச் சீனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று, 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.

1929: ஈரான் – துருக்மெனிஸ்தான் எல்லையை, 7.2 ரிச்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில், 3,800 பேர் உயிரிழந்தனர். 1,121 பேர் காயமடைந்தனர்.

1944: இரண்டாம் உலகப் போர் - 200 கம்யூனிசக் கைதிகள், ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945: இரண்டாம் உலகப் போர் - நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸும் அவரது மனைவி மேக்டா பியூரரும், பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்துகொண்டனர். இவர்களது பிள்ளைகளும், தாயினால் சயனைட் பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1945: இரண்டாம் உலகப் போர் - செஞ்சேனையின் முன்னேற்றத்தை அடுத்து, ஜேர்மனியின் தெம்மின் என்ற இடத்தில், 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்துகொண்டனர்.

1946: மேற்கு அவுஸ்திரேலியாவின் பில்பாரா என்ற இடத்தில், அவுஸ்திரேலியப் பழங்குடிகள், மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 3 ஆண்டுகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1950: குவாம் - ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.

1956: யோனாசு சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி, பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1956: மினமாட்டா என்ற கொள்ளை நோய், அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

1960: குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

1961: கியூபாவை, சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1977: தொழிலாளர் நாள் நிகழ்வின் போது, துருக்கியின் இஸ்தான்புல் நகரில், 36 பேர் கொல்லப்பட்டனர்.

1978: ஜப்பானியர் நவோமி யூமுரா, தன்னந்தனியாக வடமுனையை அடைந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.

1987: இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண் மதகுரு ஈடித் ஸ்டெயின், பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.

1989: இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து, விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

1993: இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா மே தினப் பேரணியில் கலந்துகொண்டிருந்த போது,  மனிதக் குண்டுத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். டிங்கிரி பண்டா விஜயதுங்க, ஜனாதிபதியாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2004: சைப்பிரஸ், செக் குடியரசு, எசுத்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலோவாக்கியா,, சுலோவீனியா ஆகிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2009: சமப்பால் திருமணம், சுவீடனில் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2011: பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - அல் கொய்தா தலைவர் உசாமா பின் லாடன், ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .