2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 11

Editorial   / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் கடைசி உரை இடம்பெற்றது.

1919: சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1951: கொரிய யுத்தத்தில் பங்குபற்றும் அமெரிக்க படைகளுக்கான தலைமைப் பொறுப்பிலிருந்து பிரபல இராணுவத் தளபதி ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் நீக்கப்பட்டார்.

1955: சீனப் பிரதமர் சூ என் லாயை இலக்கு வைத்து பொருத்தப்பட்ட குண்டு வெடித்ததால் எயார் இந்தியா விமானமொன்று இந்தோனேஷியாவில் நொருங்கி வீழ்ந்தது. இதில் 16 பேர் பலியாகினர்.

1957: சிங்கப்பூருக்கு சுயாட்சி வழங்க பிரிட்டன் இணங்கியது.

1979: 1971 ஆம் ஆண்டு முதல்  உகண்டாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி இடி அமீன் பதவி நீக்கப்பட்டார்.

1981: தெற்கு லண்டன் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.

1987: இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.

1996:  14 ஆண்டுகளுக்குப் பின், ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை இலக்குவைத்து லெபனான்மீது இஸ்ரேல் ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தின.

2002: வெனிசுவேலா ஜனாதிபதி ஹியூகோ சாவெஸ்ஸுக்கு எதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.

2007: அல்ஜீரியாவின் தாலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33பேர் கொல்லப்பட்டு 222பேர் காயமுற்றனர்.

2012: இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .