2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 04

Ilango Bharathy   / 2021 ஜூன் 04 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

1896: பெற்றோலில் இயங்கும் தனது வாகனத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஹென்ரி போர்ட்  வெற்றிகரமாக நடத்தினார்.

1917: ஊடக, இலக்கிய, இசைத்துறைக்கான புளிட்ஸர் விருது முதல் தடவையாக வழங்கப்பட்டது.

1928: சீனக் குடியரசு ஜனாதிபதி ஸாங் ஸுவோலின் ஜப்பானிய முகவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

1961:  கிழக்கு ஜேர்மனிக்குள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் செல்வதை தடுக்கும் வகையில் கிழக்கு ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக சோவியத் அதிபர் நிகிட்டா குருசேவ் வியன்னா மாநாட்டில் அச்சுறுத்தினார்.

1967: பிரித்தானிய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 72 பேர் பலி.

1970: பிரிட்டனிடமிருந்து டொங்கா சுதந்திரம் பெற்றது.

1988: சோவியத் யூனியன் ரயிலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 91 பேர்பலி. 1500 பேர் காயம். 

1989: ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆன்மீக தலைவராக ஆயதுல்லா கொமேய்னி தெரிவுசெய்யப்பட்டார்.

1989: சீனாவின் தியன்னமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சீன இராணுவத்தினரால் துப்பாக்கியால் சுடப்பட்டும் இராணுவத் தாங்கிகள் ஏற்றப்பட்டும் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X