2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 05

Ilango Bharathy   / 2021 ஜூலை 05 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1811: ஸ்பெய்னிடமிருந்து  வெனிசூலா சுதந்திரம் பெற்றது.

1954: நாளாந்த செய்தி ஒளிபரப்பை பிபிசி ஆரம்பித்தது.

1970: கனேடிய விமானமொன்று டொரன்டோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 109 பேர் பலி.

1975: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியனாகிய முதல் கறுப்பின வீரரானார் அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்.

1977: பாகிஸ்தானில் பிரதமர் ஸுல்பிகார் அலி பூட்டோ இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

1987: தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் இடம்பெற்றது. நெல்லியடி இராணுவ முகாம் மீது 'கப்டன் மில்லர்' தமிழீழ வீடுதலைப் புலிகளின் முதல் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தினார்.

1996: டோலி செம்மறி ஆடு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் முலையூட்டியாகியது.

1998: செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை, ஜப்பான் ஏவியது.

2004: இந்தோனேஷியாவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.

2009: சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், 15 ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன்பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .