2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 22

Ilango Bharathy   / 2021 ஜூலை 22 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1499: புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன.

1587: வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றவாதிகள் வந்திறங்கினர்.

1812: வெல்லிங்டன் பிரபு தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஸ்பெயினில் சலமாங்கா என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தனர்.

1823: யாழ்ப்பாணத்தில் டாக்டர் டானியல் வோரன் புவர் தலைமையில் அமெரிக்க மிஷனின் பட்டிக்கோட்டா செமினறி திறக்கப்பட்டது.

1916: கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் ஊர்வலமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

1933: வெஸ்லி போஸ்ட் என்பவர் முதன்முதலில் உலகத்தை தனியாக விமானத்தில் சுற்றிவந்து சாதனை படைத்தார்.

1944: போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாசிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.

1962: நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

1976: 2ஆம் உலக யுத்தக் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக பிலிப்பைன்ஸுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய கடைசி நபரை ஜப்பான் நாடுகடத்தியது.

1992: கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் புள்ளியான பாப்லோ எஸ்கோபர் ஆடம்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்றார்.

1999: விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது.

2002: ஹமாஸ் தளபதி சலாஹ் சஹேட்டை இஸ்ரேல் கொன்றது.

2003: ஈராக்கின் பஸ்ரா நகரில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி சதாம் ஹூஸைனின் மகன்களான உதேய், குசேய் இருவரும் கொல்லபபட்டனர்.

2009: சூரிய கிரகணம், ஜூலை 22: 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .