2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 17

Editorial   / 2021 மே 17 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

1902: கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு, பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.

1915: பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.

1969: சோவியத்தின் வெனேரா 6 விண்கலம், வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று, அதனுடன் மோத முன்னர், வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

1974: அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 33 பேர் கொல்லப்பட்டனர்.

1983: லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு, லெபனான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.

1990: உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை, தற்பால் சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.

1992: தாய்லாந்து பிரதமர் சுச்சிந்தா பிரப்பிராயூனுக்கு எதிராக நடந்த மூன்று நாள் எதிர்ப்புப் போராட்டங்களில், இராணுவம் சுட்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

1998: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன், சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

2004: அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம், மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.

2006: அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பலான ஒரிசுகானி, மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.

2006: தமிழ்த் தொலைக்காட்சி நடிகை சிரத்தா விசுவநாதன், தற்கொலை செய்துகொண்டார்.

2007: வட கொரியாவில் இருந்து தென் கொரியா வரையான ரயில் சேவை, 1953ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்றடவையாக இடம்பெற்றது.

2009: நான்காம் கட்ட ஈழப்போர், முடிவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .