2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 24

Editorial   / 2021 மே 24 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1901: தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில், 78 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1941: இரண்டாம் உலகப் போர் - வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், "பிஸ்மார்க்" என்ற ஜேர்மன் போர்க்கப்பல் "ஹூட்" என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.

1956: சுவிட்ஸர்லாந்தில், முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.

1962: அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர், அவ்ரோரா 7 விண்ணூர்தியில், மூன்று முறை பூமியைச் சுற்றிவந்தார்.

1991: எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டுவரும் சொலமன் நடவடிக்கையை, இஸ்ரேல் ஆரம்பித்தது.

1993: எதியோப்பியாவிடம் இருந்து, எரித்திரியா விடுதலை அடைந்தது. 2000: 22 வருட முற்றுகைக்குப் பின்னர், இஸ்ரேலியப் படையினர், லெபனானில் இருந்து வெளியேறினர்.

2000: இலங்கையில், நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.

2001: எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெரப்பா டெம்பா ஷேரி எட்டினார்.அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் இவரே.

2002: ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும், மொஸ்கோ உடன்பாட்டை எட்டின.

2007: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலுள்ள இலங்கைக் கடற்படைத் தளத்தை, கடற்புலிகள் தாக்கியளித்தனர்.

2007: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .