2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 19

Ilango Bharathy   / 2022 நவம்பர் 19 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
 
1862 – இலங்கை- காலியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற கொழும்பு பயணிகள் கப்பல் மாலைதீவுகளுக்கு அருகே மினிக்காய் தீவில் மூழ்கியது.
 
1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பிய இராணுவம் பித்தோலா நகரைக் கைப்பற்றியதன் மூலம், மாக்கடோனியாவில் ஐந்து நூற்றாண்டு கால உதுமானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
 
1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி, கோர்மொரன் ஆகிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆத்திரேலியக் கடற்படையினரும் 77 நாட்சி ஜெர்மனியக் கடற்படையினரும் உயிரிழந்தனர்.
 
1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை: சோவியத் படையினர் வோல்கோகிராட் நகர் மீது மீள்தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
 
1946 – ஆப்கானித்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐ.நாவில் இணைந்தன.
 
1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ல்சு கொன்ராட், ஆலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர் என்ற பெயரினைப் பெற்றனர்.
 
1969 – பிரேஸில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது இலக்கைப் பெற்றார்.
 
1977 – போர்த்துகல் போயிங் விமானம் ஒன்று மதீராவில் விபத்துக்குள்ளாகியதில் 131 பேர் உயிரிழந்தனர்.
 
1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
 
1985 – பனிப்போர்: அமெரிக்க அரசுத் தலைவர் ரொனால்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
 
1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
 
1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.
 
2005 – மகிந்த ராஜபக்ஸ இலங்கையின் 5வது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
 
2008 – நடிகர் எம். என். நம்பியார் காலமானார்
 
2010 – நியூசிலாந்தில் பைக் ஆற்றுச் சுரங்கத்தில் நான்கு வெடிப்புகள் நிகழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
 
2013 – பெய்ரூத்தில் ஈரானியத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .