2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றில் இன்று : ஜூன் 28

Ilango Bharathy   / 2021 ஜூன் 28 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1911 : நாக்லா என்ற விண்கல் எகிப்தில் வீழ்ந்தது.

1914 : ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோஃபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, காவ்ரீலோ பிரின்சிப் என்ற செர்பிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் தொடங்க இது காரணமானது.

1917 : முதலாம் உலகப் போர் - கிரேக்கம் கூட்டு அணிகளுடன் இணைந்தது.

1919 : வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜேர்மனிக்கும் முதலாம் உலகப் போரில் நேச அணிகளுக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.

1922 : ஐரிய உள்நாட்டுப் போர் டப்லின் நகரில் ஆரம்பமானது.

1926 : காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரின் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் உருவானது.

1940 : ருமேனியாவிடம் இருந்து மல்தோவாவை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.

1942 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் மீது நீலத் திட்டம் என்ற பெயரில் தாக்குதலை ஆரம்பித்தது.

1948 : பனிப்போர் - டீட்டோ–இசுட்டாலின் பிரிவை அடுத்து யுகொஸ்லாவியப் பொதுவுடமைவாதிகளின் அணி கொமின்ஃபோர்மில் இருந்து நீக்கப்பட்டது.

1950 : கொரியப் போர் - சியோல் வடகொரியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

1950 : கொரியப் போர் – 100,000 க்கும் அதிகமான கம்யூனிச சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1950 : கொரியப் போர் - கொரிய மக்கள் இராணுவம் சியோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் 700 - 900 வரையானோர் கொல்லப்பட்டனர்.

1964 : மல்கம் எக்ஸ் ஆப்பிரிக்க - அமெரிக்க ஒற்றுமை அமைப்பைத் தோற்றுவித்தார்.

1973 : வடக்கு அயர்லாந்தில் முதற்தடவையாக தேசியவாதிகளுக்கும், ஒன்றியவாதிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வுக்கு வகை செய்யும் முகமாக பொதுத் தேர்தல்கள் இடம்பெற்றன.

1981 : தெகுரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இசுலாமிய குடியரசுக் கட்சியின் 73 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

1995 : மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் - மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.

2004 : ஈராக்கில் இடைக்கால அரசிடம் ஆட்சி கையளிக்கப்பட்டது. அமெரிக்கா ஆதரவு ஆட்சி முடிவுக்கு வந்தது.

2009 : ஒண்டுராசு அரசுத்தலைவர் மனுவேல் செலாயா இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2016 – துருக்கியின் இஸ்தான்புல் வானூர்தி நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். 230 பேர் காயமடைந்தனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .