2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘முடக்கத்துக்குள் ஒரு கதை’ (வீடியோ)

Editorial   / 2021 மே 11 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமது நாட்டை பொறுத்தவரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள், இன்று (11) நள்ளிரவு முதல் விதிக்கப்படவுள்ளன. சில நாடுகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகளில் முழு நாடும் முடக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், நாடே முழுமையாக முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “அத்தியாவசியம்” என்ற திரைமறைவில் இருந்துகொண்டு பலரும் பல்வேறான குற்றச்செயல்களை முன்னெடுப்பர்.

ஆனால், இந்தியாவின் மைசூர் பகுதியில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேகமாக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அங்கு கடமையிலிருந்த பொலிஸார் நிறுத்தியுள்ளனர்.

பொலிஸார்: என்ன? இது

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்: “அத்தியாவசிய சேவை”

பொலிஸார்: என்ன? அத்தியாவசிய சேவை?

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்: “ஜாக்கி காலாண்டு குடியிருப்பு பகுதியில் இருந்து பாம்பை மீட்டது”

பொலிஸார்: உறுதிப்படுத்த முடியுமா?

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்: தான் கொண்டுவந்திருந்த பெரிய பிளாஸ்டிக் போத்தலொன்றை எடுத்து காண்பித்தார். அதற்குள் பெரிய நாகப்பாம்பொன்று சுருண்டிருந்தது. ஆனால், தலையை தூக்கி, தூக்கி அசைந்துகொண்டிருந்தது.

நாகப்பாம்பை கண்ட பொலிஸார், சில அடிதூரம் பின்சென்றனர்.

பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டிருந்த பாம்புடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மிகவேகமாக அவ்விடத்திலிருந்து பறந்துவிட்டார்.

அதுதொடர்பிலான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதற்கு

“முடக்கத்துக்குள் ஒரு கதை” என தலைப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .