2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உணவுப் பொருட்களின் விலை 10% அதிகரிப்பு

J.A. George   / 2023 பெப்ரவரி 16 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியாழன் (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து பேக்கரி பொருட்கள் மற்றும் பிற நுகர்பொருட்களின் விலைகள் 10% அதிகரிக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

66% மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று கூறிய அவர், பல ஆண்டுகளாக CEBக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவே இந்த கட்டண உயர்வு முன்மொழியப்பட்டதாக கூறினார்.

உணவகங்களில் விற்கப்படும் ரைஸ், கொத்து மற்றும் இதர நுகர்பொருட்களின் விலையை நள்ளிரவு முதல் 10% உயர்த்தவுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .