2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் வேடமிட்டு பண மோசடி: மூவர் கைது

J.A. George   / 2021 ஜூலை 14 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸார் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி பணம் மற்றும் தங்க நகைகளை பறித்த மூவர் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் அடையாள அட்டையை போன்ற போலி அடையாள அட்டையொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குருநாகல் மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 40 கிராம் தங்கம், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கைவிலங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் போலி அடையாள அட்டையை மக்களிடம் காண்பித்து, கைவிலங்கிட்டு, சன நெரிசல் குறைந்த பகுதிக்கு அழைத்துச்சென்று வைத்து அவர்களின் பணம், மற்றும் தங்க நகைகளை அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

வத்தளை, கொழும்பு – முகத்துவாரம் மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் இவ்வாறான 17 கொள்ளைச் சம்பவங்களுடன சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X