2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மகிழ்ச்சிப் பெருவிழா

Super User   / 2013 டிசெம்பர் 11 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்திய மகிழ்ச்சிப் பெருவிழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது. உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தலைமையிலான இந்த நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச வளாகத்தில் இந்த இடம்பெற்றது.

இதன்போது சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சமுர்த்தி வங்கிக் கட்டட திறப்பு விழா, மஹிந்த சிந்தனையின் கீழ் பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கல் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய ஆலம்குளம் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான காணி உத்தரவுப்பத்திரம் வழங்கல் என்பன இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர்,  அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யு.பி.எஸ்.அனுருத்த பியதாச, பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், யாசிர் ஐமன், ஏ.எல்.முனாப் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X