2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ என்னைப் போட்டோ எடுக்காதீர்’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 28 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேட்டுப்பாளையம்;

''நான் என்ன அக்யூஸ்டா, என்னை போட்டோ எடுக்க வேண்டாம்'' என, முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் ஆவேசமடைந்தார்.

நீலகிரி தொகுதிஅண்ணா திராவிட முன்னேற்ற கழக  முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், தன் சொந்த ஊரான குன்னூரில், குடிபோதையில் தன் உறவினர் கோபியிடம், தகராறு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே, அடிதடி நடந்துள்ளது. இரு தரப்பினரும், குன்னூர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் நீலகிரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், முன்பிணை  கேட்டு, மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனு மீது விசாரணை செய்த நீதிபதி, '' மறு உத்தரவு வரும் வரை மேட்டுப்பாளையம் பொலிஸ் நிலையத்தில், தினமும் கையெழுத்து போட வேண்டும்,'' என, நிபந்தனையுடன் கூடிய முன்பிணை வழங்கினார். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன்  மேட்டுப்பாளையம் பொலிஸ் நிலையத்தில்  காலை, 10:00 மணிக்கு கையெழுத்து போட வந்தார்.

அப்போது, அவரை பத்திரிக்கை போட்டோ கிராபர்களும், ஊடக பணியாளர்களும், போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். இதைப் பார்த்து ஆவேசமடைந்த கோபாலகிருஷ்ணன், ''நான் என்ன அக்யூஸ்டா, என்னை போட்டோ எடுக்க வேண்டாம்,'' என கூறி, வேகமாக பொலிஸ் நிலையத்தில் உள்ளே நுழைந்தார். கட்சிக் கரை வேட்டி கட்டி வராமல், பேண்ட்  சட்டை அணிந்து வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .