2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தடுப்பூசியை தொடையில் செலுத்திக் கொண்ட இளைஞன்

Editorial   / 2021 ஜூலை 27 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவனந்தபுரம்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகளவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கைகளிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை அடுத்த ஆலத்தூரைச் சேர்ந்த பிரனவ் என்ற இளைஞன் (வயது 22) தனக்கான கொரோனா தடுப்பூசியை காலில் செலுத்திக்கொண்டார்.

 

பிறவியிலேயே கைகளை இழந்த பிரனவ், கால்களால் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். ஓவியம் வரைதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றையும் செய்கிறார். இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் ஆர்வமாக இருந்தார்.

ஆலத்தூர் பகுதியில் உள்ள சிறப்பு முகாமுக்கு பிரனவ், நேற்று (26) தடுப்பூசி போடச் சென்றார். கைகள் இல்லாததால் தனக்கு காலில் தடுப்பூசி போடும்படி கேட்டுக்கொண்டார். இது பற்றி தடுப்பூசி முகாமில் இருந்த செவிலியர் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்டனர்.

 

அவர்கள் கொரோனா தடுப்பூசியை கால்களில் செலுத்திக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினர். இதையடுத்து பிரனவுக்கு செவிலியர் காலிலேயே தடுப்பூசி செலுத்தினர்.

காலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரனவ், கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். இதனால்தான் நான் கைகள் இல்லாத பிறகும் கால்களில் செலுத்திக் கொண்டேன் என  அங்கிருந்த நிருபர்களிடம் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X