2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பாங்கான் ஏரியில் சீனாவின் 2 ஆவது பாலம்

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு லடாக்கில் உள்ள சாச்சைக்குரிய பான்காங் ஏரி அருகே இரண்டாவது பாலத்தை சீனா கட்டிவருவது செயற்கைக்கோள் புகைப்படம் முலம் உறுதியாகி உள்ளது. 

பீஜிங், கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய, சீனப்படைகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி சீன படையினர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதில் சீன படையினருக்கும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. 

அதன்பின்னர், பான்காங் ஏரி யின் தெற்கு பகுதியை இந்திய இராணுவத்தினா் 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் கைப்பற்றினா். இதனால் அந்த பகுதிகளில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த சீனா முயன்று வருகிறது.

லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் கடந்த ஜனவரி  மாதம் பாலம் ஒன்றை சீன இராணுவம் கட்டியது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஒரு புதிய பாலத்தைகட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .