2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பு சவால்களை கையாள்வது குறித்து பேச்சு

Freelancer   / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில் உலமாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். 

அஜித் தோவலின் அழைப்பின் பேரில், இந்தோனேசியாவின் அரசியல், சட்ட மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் முகமது மஹ்ஃபுத் இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

புது டெல்லியில் இடம்பெற்ற அந்த சந்திப்பின் போதே தோவல் மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

இந்தோனேசிய அமைச்சருடன் உலமாக்கள் மற்றும் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் அடங்கிய 24 உறுப்பினர்களைக் கொண்ட சர்வமதக் குழுவும் வருகை தந்தது.

இரு பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பாக இருக்கும் இந்த சந்திப்பில், கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும் சைபர்ஸ் வெளியில் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை கையாள்வதில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், இரண்டாவது இந்தியா-இந்தோனேசியா பாதுகாப்பு உரையாடலுக்காக தோவல் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்த போது இந்தோனேசிய அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தியாவும் இந்தோனேசியாவும் இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நெருங்கிய கலாச்சார மற்றும் வணிகத் தொடர்பைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இந்து, பௌத்த மற்றும் பிற்கால முஸ்லிம் நம்பிக்கைகள் இந்தியாவின் கடற்கரையிலிருந்து இந்தோனேசியாவுக்கு பயணித்தன. 

இந்தோனேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 120,000 இந்தோனேசியர்கள் உள்ளதுடன், அவர்கள் முக்கியமாக ஆடை மற்றும் விளையாட்டுப் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த தசாப்தங்களில், இந்தோனேசியாவும் கடுமையான பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது மற்றும் பெரிய பயங்கரவாத சவால்களை எதிர்கொண்டது.  

ஜகார்த்தாவில் நடந்த சந்திப்பில், தோவல் மற்றும் மஹ்ஃபுத் இரு நாடுகளுக்கும் இடையே பல இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.
 
2016 டிசெம்பரில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இந்தியாவுக்கு விஜயம் செய்த போது இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒரு பாதுகாப்பு உரையாடலை ஏற்படுத்த முடிவு செய்தன. 

பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான விரிவான செயல் திட்டத்தை உருவாக்க இரு நாடுகளும் பாதுகாப்பு உரையாடலை நிறுவ ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .