2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோடியை ஜப்பானில் சந்திகிறார் பைடன்

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெற உள்ளது. 

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜப்பான் செல்ல உள்ளார்.  அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமொிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு தொடக்க நிகழ்ச்சியில் ஜோ பைடன் கலந்து கொள்ளவுள்ளாா். இந்தோ-பசிபிக் நாடுகளை சோ்ந்த தலைவா்களும் இதில் பங்கேற்க உள்ளனா். ஜப்பான் நாட்டிற்கு செல்லும் முன் தென்கொாியாவுக்கு செல்லும் ஜோ பைடன் அங்கு நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .