2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாயில்லா ஜீவன்களை விட்டுவிடுங்கள் !

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர் 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம்  சௌடனஹள்ளி பிரதேசத்திலுள்ள ரோட்டில், மூட்டைகள் காணப்பட்டன. இதைக் கண்ட  அந்தப் பகுதி மக்கள் அந்த  மூட்டைகளை அவிழ்த்து பார்த்தனர். அவற்றுள் 15 குரங்குகள் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டன. அதை மீட்டு பேளூர் வனத்துறையினர் உதவியுடன் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் விஷம் வைத்து 60இக்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தோட்டத்தில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வந்ததால் யாரோ ஒரு விவசாயி இந்த படுபாதக செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த மனிதநேயமற்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் வாயில்லா ஜீவன்கள் என நினைக்காமல் விஷம் வைத்து குரங்குகளை சாகடித்த கயவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .