2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘ஹிண்டன்பர்க் சர்ச்சை‘; 1 ஆம் இடத்தை இழந்தார் அதானி

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 02 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவைச் சேர்ந்த  பிரபல ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க் ‘கடந்த 24-ஆம் திகதி அதானி குழுமம் தொடர்பான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் , பங்குச் சந்தையில்  நாளுக்கு நாள் சரிவடையத் தொடங்கியது.

இதன் காரணமாக அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மாத்திரம் இந்திய மதிப்பில்  சுமார்  7.44 லட்சம் கோடிரூபாய்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 15ஆவது இடத்திற்குச் சென்றுள்ளார்.

 அதேசமயம் ஆசியாவின் 1 ஆவது பணக்காரர் என்ற  அந்தஸ்தையும் அவர் தற்போது  இழந்துள்ளார்.

இந்நிலையில், இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களைக்  காக்க வே பங்கு விற்பனை இரத்து செய்யப்பட்டது என்றும் பங்கு விற்பனை இரத்து முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேசமயம் உலக பணக்காரர்கள் வரிசையில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள முகேஷ் அம்பானி, ஆசியாவின் 1 ஆவது பணக்காரர் என்ற இடத்தைப்  பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .