2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

10,000 பேருக்குப் பொது மன்னிப்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

`ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக  அணியவில்லை` எனக்  கூறி கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி‘ என்ற இளம்பெண்,  பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஈரான் அரசுக்கு  எதிராக ஆயிரக்கணக்கானோர்  தொடர்  போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 20 ,000 பேரைப் பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரானில்  இஸ்லாமிய புரட்சி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அந்நாட்டின் மதத்  தலைவரான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்கள் உட்பட பத்தாயிரம் பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்து.

மேலும் இந்த மன்னிப்பை அவர் நிபந்தனைகளுடன் வழங்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .