2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மன்னர் மம்மி கண்டுபிடிப்பு

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 31 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தில் அரச வம்சாவளியைச் சேர்ந்த 3,500ஆண்டுப் பழைமையான மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட கைத்தறித் துணியைக்கூட அகற்றாமல் மின்னிலக்க முறை எனப்படும் புதிய தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தி குறித்த மம்மியை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த மம்மியானது கி.மு 1525ஆம் ஆண்டிலிருந்து 1504ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த Amen-hotep இன் உடல் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அவர் 35ஆவது வயதில் இறந்துள்ளார் எனவும் அவரின் மூளை தற்போதும் உடலுக்குள் இருப்பதும்  தெரியவந்துள்ளது.

எகிப்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ரகசியங்களைக் கண்டறிய இப் புதிய தொழில்நுட்பம் உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .