2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

30,000 பேரை பூங்காக்குள் அடைத்து வைத்த சீன அதிகாரிகள்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 03 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் டிஸ்னிலேண்ட் கேளிக்கைப்  பூங்காவுக்குள்  30,000 பேருக்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்துள்ள  சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கொவிட் சீரோ திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் மொத்தமாக அவர் இருக்கும் பகுதியை முடக்குவதோடு அவர் கடந்த 21 நாட்களில் சந்தித்த எல்லோரையும் கண்டுபிடித்து உடனே அவர்களை தனிமைப்படுத்துவது ஆகும்.

இந்நிலையில் சீனாவின் ஷாங்காயில் உள்ள  டிஸ்னிலேண்டிற்கு நேற்று முன்தினம்   சென்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வேகமாக செயல்பட்ட அதிகாரிகள் மொத்த டிஸ்னிலேண்ட் பூங்காவினையும் பூட்டிவைத்துள்ளனர்.

இதன் போது அப் பூங்காவில் 30 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர்  இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு கொரோனாத் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அவர்களுக்கான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும்  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .