2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

5 நாட்களில் 11,500 விமானங்கள் ரத்து

Freelancer   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் வார இறுதியில் உலகெங்கும் விமானப் பயணங்களில் உண்டான பாதிப்பு திங்களன்றும் தொடர்ந்தது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதனால் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல லட்சம் பேர் தங்கள் பணியிடம் உள்ள ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை உலக அளவில் உண்டாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல், உலகெங்கும் சுமார் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  பத்தாயிரம் விமானங்களின் புறப்பாட்டு நேரம் தாமதமாகியுள்ளது.

திங்கட்கிழமை மட்டும் சுமார் 3,000 விமானங்கள் ரத்தாகின. செவ்வாய்க்கிழமையான இன்று 1100க்கும் அதிமான விமானங்கள் இதுவரை ரத்தாகியுள்ளதாக ஃப்ளைட்அவேர் எனும் விமானப் பயணம் குறித்த தகவல்களைத் தரும் இணையதளம் கூறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X