2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

`90 வருடங்களுக்குத் திறக்க கூடாது`

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசரும், ராணி 2ஆம் எலிசபெத்தின் கணவருமான
பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் தனது 99 வயதில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் இளவரசர் பிலிப் இறப்பதுக்கு முன்னர், தான் எழுதி வைத்திருந்த உயில்
ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்ததாகத் தகவல்
வெளியாகியுள்ளது.



இதனையடுத்து அவரது உயில் தொடர்பாக லண்டன் உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவைப்
பிறப்பித்துள்ளது. அதில் பிலிப் எழுதி வைத்துள்ள உயிலில் உள்ள விவரங்களை வெளியிடாமல், அதனை 90 ஆண்டுகளுக்குச் சீல் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த உயிலின் நகலைப் பதிவுசெய்யவோ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ
கூடாது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரது மனைவி எலிசபெத்துக்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .