2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘Squid Game’ ஐ பார்க்க சிறுவர்களை அனுமதிக்க வேண்டாம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}



உலகம் முழுவதும் அமோக வரவேற்பைப் பெற்ற ஸ்குயிட் கேம்( Squid Game) இணையத் தொடரை பார்க்க சிறுவர்களை அனுமதிக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

 கடந்த மாதம் Netflix-ல் வெளியான இத் தொடரை, ஒரு மாதத்துக்குள் 11 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் பார்த்ததால் இது வரை எந்த தொடருக்கும் கிடைக்காத வரவேற்பு இதற்கு கிடைத்துள்ளது.

எனினும்18 வயதுக்கு மேற்பட்டோருக்கான இத்தொடரில் வன்முறை நிறைந்த கோரக் காட்சிகள் அதிகம் உள்ளதால் இது சிறுவர்கள் மனதில் வன்முறை எண்ணெங்களை விளைவிக்கக் கூடும் என மன நல மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 எனவே இத்தொடரை பார்க்க சிறுவர்களை அனுமதிக்க கூடாது எனப் பெற்றோர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது பல்வேறு நாடுகளில் உள்ள பாடசாலைகளில் இந்த தொடரை பற்றி பேசவே தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .