2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அடேங்கப்பா..! “4.5 கிலோ எடை” ரத்தக்கசிவால் அம்பலமானது

Editorial   / 2025 ஜூலை 20 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு 20 வயதான மாணவி, எதிர்பாராதவிதமாக தனது விடுதி அறையில்வே ‘ராட்சத’ குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம்  இடம்பெற்றுள்ளது. 

4.5 கிலோ எடையுள்ள அந்த குழந்தையின் பிரசவம் இரவில் ஏற்பட்டதால், மாணவியின் அறைத் தோழி தீவிர இரத்த வாசனையால் விழித்தெழுந்ததும் பரபரப்பாக  கூறியுள்ளார். மாணவியின் மேல் படுக்கை போர்வை முழுவதும் இரத்தத்தில் நனைந்திருந்தது என்றும், அந்த நேரத்தில் மாணவி வலியில் தவித்துக் கொண்டிருந்தார் என்றும் அறைத் தோழி தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக் குழு, குழந்தை பிறந்துவிட்டதைக் கண்டதும், அவசரமாக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருத்துவசிகிச்சை அளித்தனர். மருத்தவர்கள், இந்த அளவுக்கு பெரிய குழந்தையை கண்டதும் , மாணவியின் உடல் நிலையைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், மாணவி கர்ப்பம் நிரம்பிய நிலையில் இருந்தபோதும், தன்னுடைய இறுதி பரீட்சைகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருக்க விரும்பியதாலும், மேல்படுக்கையிலேயே ஏறி தங்கியிருந்தார். இந்த விஷயத்தில், “இது அவளுக்குப் பிரசவம் முதல் முறை அல்ல. ஏற்கனவே ஒரு குழந்தை அவளுக்கு உண்டு,” என்று அறைத் தோழி அமைதியாக கூறியிருந்தார் என்பது சுவாரஸ்யமான  பின்னணி ஆகும்.


இதுதொடர்பாக, சீன சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் பெரும் விவாதத்தையும், உற்சாகத்தையும் உருவாக்கியுள்ளது. “அவர்  இப்போது எந்த வேலைக்குச் சென்றாலும், மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டிய நிலை இல்லை” என்று ஒருவர் கருத்து தெரிவித்தார்.

மற்றொரு நபர், “அறைத் தோழி அமைதியாக இருந்தாலும், உடல் நலமும், தீவிர சிகிச்சையும் முதலில் முக்கியம்,” எனவும் கூறினார். தாய் மற்றும் குழந்தை இருவரும் தற்போது பாதுகாப்பான நிலையில் இருக்கின்றனர் என்றும், இந்த வியத்தகு சம்பவம் மாணவர்களிடையே வெகுவாக பரவி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X