2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அணுவாயுதப் பலத்தை விரிவாக்கும் சீனா?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 28 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏவுகணை தாங்கிகளுக்கான இரண்டாவது தளம் ஒன்றை, தனது மேற்கு பாலைவனங்களில் சீனா உருவாக்குவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

அந்தவகையில், சீனாவானது அணுவாயுதப் பலத்தை விரிவாக்குவதற்கான சமிக்ஞைகள் இதுவென ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

செய்மதிப் புகைப்படங்கள் மூலம் அடையாளங் காணப்பட்ட ஸின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள புதிய ஏவுகணைத் தளமானது 110 ஏவுகணைத் தாங்கிகளைக் கொண்டிருப்பதாக, அமெரிக்க விஞ்னானிகளின் சம்மேளனத்தால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இதற்கு அருகிலுள்ள கன்சு மாகாணத்தில் 120 ஏவுகணைகள் தாங்கிகள் கட்டுமானத்தில் உள்ளதாக முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .