2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இன்று (06) அறிவிக்கப்பட்டது.

ஜேர்மனி நாட்டின் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவின் டேவிட் மெக்மிலன் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்துள்ளது.

சமச்சீரற்ற சேதன வினையூக்கி: மூலக்கூறுகளை உருவாக்குவதற்கான ஒரு தனித்துவமான கருவியை கண்டுபிடித்ததற்காக  இருவருக்கும் இந்த பரிசு வழங்கப்படுகிறது.

உலக அளவில் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் திங்கட்கிழமை (04) முதல் அறிவிக்கப்படுகிறது.

மருத்துவத்துவம் மற்றும் பௌதிகவியலுக்கான பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகளும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அறிவிக்கப்படவுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .