2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்குச் சிறை

Editorial   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணங்கள்  செய்து கொள்ள வேண்டும் என்ற விநோத சட்டமானது ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எரித்திரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர்கள்  இடம்பெற்று வருகின்றன. இதன் விளைவாக அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்வடைந்துள்ளது.

இதனால் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அவ்வாறு  திருமணம் செய்ய மறுக்கும் ஆண்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படுமெனவும், அத்துடன் முதல் மனைவி அவரது கணவரின் 2ஆவது திருமணத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தால் இருவரும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், எரித்திரியன் அரசாங்கத்தின் இந்த முடிவு உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .