2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இஸ்ரேலில் செவ்வாய்க் கிரகம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாய்க்  கிரகத்திற்கு   மனிதர்களை அனுப்புவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இஸ்ரேலில் உள்ள ராமோன் பள்ளத்தாக்கில்   ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இதனை இஸ்ரேல் விண்வெளி மையம், ஆஸ்திரிய சங்கம், உள்ளூரில் உள்ள டி-மார்ஸ் என்ற அமைப்பு ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

செவ்வாய்க்  கிரகத்தைப்போன்றே சிவப்பு நிறத்தில் உள்ள  இப் பகுதியில் மலைப்பகுதியைக் குடைந்து ஆயிரத்து 300 சதுர அடியில் வீடுபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், ஒஸ்திரியா, இஸ்ரேல், ஜேர்மனி, நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 விண்வெளி வீரர்களும், ஒரு விண்வெளி வீராங்கனையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதற்கான சூழல் உள்ளிட்டவை குறித்து 25 நாடுகளைச் சேர்ந்த 200 ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள 20-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த ஆராய்ச்சியின்போது, விண்வெளி வீரர், வீராங்கனைகளின் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவுசெய்யப்படும்.

மனிதர்களின் உடலில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று விண்வெளி அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு உதவும் என்று விண்வெளி அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .