2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இஸ்ரேல் தாக்குதலை முறியடித்த வான் கட்டமைப்புகள்’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 22 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொம்ஸிலுள்ள அல் குவாசிர் பகுதி மீதான இஸ்ரேலியத் தாக்குதல் ஒன்றை சிரியாவின் வான் கட்டமைப்புகள் இன்று அதிகாலை இடைமறித்ததாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலால் சில தளபாட சேதமேற்பட்டதாகவும், எதுவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என அறிக்கையொன்றில் சிரிய இராணுவத் தகவல் மூலம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கருத்து எதனையும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்திருக்கவில்லை.

இதேவேளை, லெபனானிய எல்லையைக் கடந்து இஸ்ரேலியப் பிராந்தியத்துக்குள் நேற்றிரவு கடந்ததாக அவதானிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை தமது படைகள் தேடுவதாக அறிக்கை ஒன்றில் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .