2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஈராக்குக்கு ஐ. அமெரிக்க படைகள் தேவையில்லை’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 25 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுடன் சண்டையிடுவதற்கு ஐக்கிய அமெரிக்க சண்டைப் படைகள் இனி ஈராக்குக்குத் தேவையில்லை என ஈராக்கின் பிரதமர் முஸ்தஃபா அல்-கட்ஹிமி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உத்தியோகபூர்வமாக ஐ. அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் உத்தியோகபூர்வ காலப் பகுதியானது இவ்வார ஐ. அமெரிக்க அதிகாரிகளுடனான பிரதமர் அல்-கட்ஹிமியின் பேச்சுக்களிலேயே தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.

த அஷோஷியேட் பிரஸ் செய்தி முகவரகத்துடனான நேர்காணல் ஒன்றிலேயே குறித்த கருத்தை பிரதமர் அல்-கட்ஹிமி வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, இனியும் ஐ. அமெரிக்க பயிற்சியை மற்றும் இராணுவப் புலனாய்வுச் சேகரிப்பை ஈராக் கோரும் என பிரதமர் அல்-கட்ஹிமி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .