2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உணவு பஞ்சத்தில் தவிக்கும் ஆப்கானிஸ்தானியர்கள்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களின் ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில்  அந் நாட்டு மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவுப் பொருட்களை வாங்கத் தங்களது பெறுமதியான  உடைமைகளை விற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல இலட்சக்கணக்கான  மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
 

மேலும் உலக உணவுத் திட்ட நிர்வாக இயக்குநர், டேவிட் பீஸ்லி இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ”ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் (22.8 மில்லியன்) கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பட்டினியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.  எனவே

மனிதாபிமான செயல்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .