2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகின் முதல் ’செயற்கை நுண்ணறிவு நீதிபதி’

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே முதல் முறையாக, செயற்கை நுண்ணறிவு கொண்ட நீதிபதியை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருவதாகவும் இதன் மூலம் வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என நம்பப் படுவதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பயன்படுத்தி இந்த செயற்கை நுண்ணறிவு நீதிபதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,  தற்போது பணமோசடி மற்றும் திருட்டு வழக்குகள் போன்றவற்றை தீர்ப்பதற்கு மாத்திரம் இதனைப் பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் AI என்னும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், தவறைக் கண்டறிய முடியும், ஆனால் முடிவெடுப்பதில் மனிதர்களின் இடத்தை அதனால் எடுத்துக் கொள்ள முடியாது," என்று இதனைக் கண்டுபிடித்தவர்கள்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .