2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எதியோப்பியாவில் வென்ற பிரதமர் அபியின் கட்சி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 11 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதியோப்பியாவின் பாராளுமன்றத் தேர்தலில், உத்தியோகபூர்வ முடிவுகளின்படி அந்நாட்டின் ஆளும் கட்சியான செழுமைக் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களை வென்றுள்ளது.

அந்தவகையில், அந்நாட்டுப் பிரதமர் அபி அஹ்மட்டின் இரண்டாவது ஐந்தாண்டு பதவிக் காலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதியோப்பியாவின் 10 பிராந்தியங்களில் மூன்றில் வாக்களிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், எதியோப்பிய தேசிய தேர்தல் சபையால் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 436 ஆசனங்களைக் கொண்ட மத்திய பாராளுமன்றத்தில் 410 ஆசனங்களை பிரதமர் அபியின் கட்சி வென்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X