2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஏலத்தில் `மோனா லிசா` ஓவியம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 08 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரீஸில், 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மோனா லிசா ஓவியத்தின் பிரதியொன்று  ஏலம் விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1503ஆம்  ஆண்டு லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் பரீஸில் உள்ள லூவார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் மோன லிசா ஓவியம் வரையப்பட்ட சில ஆண்டுகளிலேயே மேலும் சில ஓவியர்கள் அதை போலவே அச்சசலான பிரதிகளைத் தீட்டினர்.

அவ்வாறு தீட்டப்பட்ட பிரதி ஓவியம் ஒன்று கடந்த ஜூன் மாதம் இலங்கை மதிப்பில் சுமார் 68 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பரீஸில் உள்ள  400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றொரு பிரதி ஓவியம் ஏலம் விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .