2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒன்றரை வருடத்திற்குப் பின் திறக்கப்பட்ட சர்வதேச எல்லைகள்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 03 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் சுமார் 600 நாட்களுக்குப் பின்னர் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் அந்நாட்டு மக்கள் உட்சாகமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுப் பரவலைக்  கருத்திற்கொண்டு உலக அளவில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய நாடுகளில் அவுஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

 குறிப்பாக கடந்த வருடம் மார்ச் மாதம் அந்நாட்டின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதோடு பயண விதிமுறைகளும், கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

 இதனால் மக்கள், தங்களது அயல் மாநிலங்களுக்குச் செல்வதற்கும், தங்களின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும் முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது  நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .