2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒமிக்ரோன் தொடர்பில் புதிய செய்தி

Freelancer   / 2022 ஜனவரி 02 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமிக்ரோனின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஜப்பானைச்சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகள் மீது ஒமிக்ரோன் பாதிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அதில் ஒமிக்ரோன் தொற்று மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, எடை குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

கொரொனாவின் பிற உருமாறிய வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் எலிகளின் நுரையீரலில் இருந்த ஒமிக்ரோன் பாதிப்பு பத்தில் ஒரு மடங்கு குறைவாக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மனித திசுக்கள் மீதான ஆய்வறிக்கையும் ஒமிக்ரோன் பாதிப்பு குறைவாக இருப்பதையே சுட்டிக்க்காட்டுகிறது.

12 நுரையீரல் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வு கொரோனாவின் முந்தைய உருமாற்றங்களைக் காட்டிலும் ஒமிக்ரோனின் பரவல் மெதுவாக இருப்பது தெரிய வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .