2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மம்மி கண்டுபிடிப்பு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 29 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரு நாட்டில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்னர்  பதப்படுத்தப்பட்ட மனித உடல், ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள் இருந்தே இம்மம்மியானது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும்  குறித்த மம்மியானது அதன் கைகள் மற்றும் கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும், அதன் அருகே, உணவுப் பொருட்கள் மற்றும் பானைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சக்லா மலைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகால மக்களிடைய, இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம், நடைமுறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள மம்மியின் , துல்லியமான காலத்தை அறிந்திடும் வகையில், ரேடியோ கார்பன் முறையில் பரிசோதிக்க, தொல்பொருள் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .