2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கடலுக்கு அடியில் விநோதப் போட்டி

Ilango Bharathy   / 2021 நவம்பர் 03 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘ஹலோவீன்’ பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் பல்வேறு போட்டிகள்,மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கடலுக்கு அடியில் பூசணிக்காயைச் செதுக்கி உருவங்கள் வரையும் விநோத போட்டியொன்று நடைபெற்றுள்ளது.

இதற்காக நீச்சல் வீரர்கள் முதுகில் கத்தி, பூசணிக்காய், ஒட்சிசன் சிலிண்டர்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றுள்ளனர்.

அங்கு விமானம், ஆக்டோபஸ், காதல் உருவங்கள், ஜெல்லிபிஷ் போன்ற பல்வேறு உருவங்களை போட்டியாளர்கள் பூசணிக்காயில் செதுக்கியுள்ளனர்.



இப் போட்டியில் ‘டான் ஈட்ஸ்மோ’ என்பவர் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X