2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடவுளின் பொற்கரம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அண்மையில் வெளியிட்ட புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த புகைப்படமானது விண்வெளியின் ஆழமான இருட்டில் தங்க நிறத்தில் கை போன்ற ஒரு பெரிய வடிவம் காணப்படுவதாக அமைந்துள்ளமையினால் இதனை இது இறைவனின் கை அதாவது HAND OF GOD என்று கூறுகின்றனர்.

இந்த வடிவமானது அதிக ஆற்றலும் நுண்ணிய துகள்களும் கொண்ட நெபுலா (Nebula )என்று விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். அதாவது ஒரு நட்சத்திரம் வெடித்து சிதறி தோன்றும் பொழுது அதிலிருந்து விட்டுச் செல்லப்படும் பல்சரிலிருந்து(காந்த இயல்பு கொண்ட சுழலும் நட்சத்திரம்) வருவது தான் இந்த வடிவம். அதிலும் இந்த பல்சர் 19 கிலோமீற்றர் பரப்பளவு உடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவெனில் இந்த பல்சர் தன்னைத்தானே நொடிக்கு 7 முறைகள் சுற்றிக்கொள்ளும். இது பூமியிலிருந்து 17000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது இந்த புகைப்படத்திற்கு இணையவாசிகள் 25,000 லைக்குகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .