2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காதலியை விற்ற காதலன் எலும்புக் கூடாக மீட்பு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 05 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் நபர் ஒருவர்  தனது மகளின் காதலனைக்  கொன்று சடலத்தைக் காரின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த  சம்பவம் அந்நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர்  60 வயதான   ஜோன்  இசென்மன் (John Eisenman ).

அவரது  மகள், அரோன் சோரென்சன்(Aaron Sorenson) ,  என்ற இளைஞரைக்  காதலித்து வந்ததாகவும், ஆனால் அரோன் பணத்திற்காக கடந்த ஆண்டு அவரது மகளைப் பாலியல் தொழில் புரியும்  கும்பலிடம்1,000 அமெரிக்க டொலர்களுக்கு  விற்பனை செய்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், ஆத்திரமடைந்த ஜோன் தனது மகளை அக் கும்பலிடமிருந்து மீட்டுள்ளதோடு, அரோனை காட்டுப் பகுதிக்குள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளதாகவும் பின்னர் அரோனின்  உடலை கார் டிக்கிக்குள் வைத்து ஒதுக்குபுறமான பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நீண்ட காலமாக  சந்தேகத்துக்கிடமாக கார் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தவே குறித்த காரில் எலும்புக் கூடு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

மேலும் விசாரணையில், குறித்த எலும்புக்கூடானது அரோனுடையது  என்பது தெரியவந்துள்ள நிலையில் ஜோன் தானாகவே பொலிஸாரிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .