2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காதலியைத் துரத்திச் சென்றவர் மரணம்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலியின் காரை திரைப்படப்பாணியில்   துரத்திச் சென்ற நபரொருவர்  உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரைச் சேர்ந்த குறித்த நபருக்கும் அவரது காதலிக்கும் இடையே கடுமையான  வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவரது காதலி அந்நபரை கடுமையாகத் திட்டிவிட்டுத்  தனது காரில் வேகமாகச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த அந்நபர், காதலியின் காரைத்  தடுத்து நிறுத்த  ஹொலிவூட் தீரைப்பட பாணியில் தனது காரில் வேகமாகச் சென்றுள்ளார் எனவும்  இதன்போது  காதலியின் காரின் பின்புறம் பலமுறை மோதியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே  காதலியை முந்திச் செல்ல முயன்ற அவரது கார்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .