2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குவெட்டாவில் போராட்டம் முடிவுக்கு வந்தது

Ilango Bharathy   / 2021 ஜூலை 09 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான்: பலூசிஸ்தான் மாகாண பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே  கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும்  இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இம்மோதலையடுத்து எதிர்க்கட்சியின் 17 உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்காரணமாக  14 நாட்களுக்கு மேலாக எதிர்கட்சியினர்  பலூசிஸ்தானின் தலை நகரான குவெட்டாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் குறித்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .