2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொரோனா தடுப்பு மருந்து: தண்ணீரை ஏற்றிக் கொண்ட 800 பேர்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 22 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உகண்டாவில் ஏமாற்றுக்காரர்கள் குழுவொன்றால் விற்பனை செய்யப்பட்ட போலியான கொரோனா தடுப்புமருந்துகளை குறைந்தது 800 பேர் ஏற்றிக் கொண்டுள்ளனர்.

இத்தடுப்புமருந்தானது தண்ணீரைத் தவிர வேறொன்றுமில்லை எனத் தெரிவித்த அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களை இலவசமான தடுப்புமருந்தை ஏற்றிக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஏமாற்றுக்காரர்கள் கடந்த மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அக்குழுவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து குறைந்தது 812 பேராவது போலியான கொரோனா தடுப்புமருந்தைப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தடுப்புமருந்தொன்றுக்கு குறித்த குழுவானது 28 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 56 ஐக்கிய அமெரிக்க டொலர்களை அறவிட்டுள்ளது. இந்தியாவின் சேரம் நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ரனெக்கா தடுப்புமருந்துகளை போல குறித்த தடுப்புமருந்துகள் இருந்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X