2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கொவிட்-19 உண்மைகளை பொய்கூறி மறைத்தது சீனா’

Editorial   / 2021 ஜூலை 28 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாஷிங்டன்(யுஎஸ்)

கொவிட்-19 பற்றிய உண்மைகளை பொய்கூறி மறைத்ததாகவும் தொற்றின் தோற்றம் பற்றிய ஆதாரங்களை அழித்ததாகவும்  ஐக்கிய ​அமெரிக்காவின் செனட்டர் டொம் கொட்டன், சீனாவை சாடியுள்ளார்.

“சாட்சிகளும் சாட்சியங்களும் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் காணாமல் போயிருக்கலாம். இந்த விடயத்தில் நாங்கள் ஓர் உறுதியான பதிலைப் பெறமுடியாமல் இருக்கிறது” என்று கொட்டன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அத்துடன் அவர், தொற்று எதுவும் இல்லையென்று மறுத்ததற்காக உலக சுகாதார நிறுவன இயக்குனரையும் தாக்கிப்பேசினார்.

ஆரம்ப காலத்திலிருந்தே சீனாவின் பின்பொக்கட்டில் இயக்குனர் இருக்கிறார். இவ்வருட ஆரம்பத்தில் விசாரணைகளுக்காக சீனா வுஹானுக்கு போலி ஆணையத்தை  அனுப்பியவர்களும் அவர்கள்தான் என்றும் செனட்டர் கூறினார்.

பீஜிங்குக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்காததற்காக அவர் அமெரிக்க ஜனாதிபதியையும் குறை கூறினார்.

“ஆனாலும் இந்த தொற்றை கட்டவிழ்த்துவிட்டதற்கு சீனாவே பொறுப்பேற்கவேண்டும். எங்களால் எவ்வளவோ செய்யமுடியும். ஆனால், எதுவுமே செய்யாமல் இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க மக்கள் ஜோ பைடனை தெரிவுசெய்திருக்கிறார்கள். காங்கிரஸ் உறுப்பினர்களே அமெரிக்காவுக்கான  முடிவுகளை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்த டொம் கொட்டன், ஆனால், அரசாங்கம் இந்த முடிவுகளை பொது சுகாதார அதிகாரத்தினருக்கு மாற்றிவிட்டது என்றும் அவர் சொன்னார்.

சீனாவின  தேசிய சுகாதார ஆணையம், உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டாம் கட்ட விசாரணை திட்டத்தை அண்மையில் மறுத்துவிட்டது.

பின்னர் அமெரிக்கா இந்த முடிவில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதோடு அது ஆபத்தானது என்றும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X