2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோழி இரத்தத்தை குழந்தைகளுக்கு ஊசி மூலம் ஏற்றுகிறது சீனா

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு 'கோழியின் இரத்தம்’ கொண்ட ஊசியைச் செலுத்தும் நடவடிக்கை பிரபலமடைந்து வருகின்றது.  

தங்களின் பிள்ளைகள்  திறன் படைத்தவர்களாக வேண்டும் என ஆசைப்படும் பெற்றோர்களே இவ்வாறு  சிக்கன் பேரண்டிங் (chicken parenting) என்ற வினோதமான குழந்தை வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்குழந்தை வளர்ப்பு முறையின் மூலம் கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்  என அவர்கள் கருதுவதாகக்  கூறப்பட்டுள்ளது.

மேலும் இக் கோழி இரத்தமானது சிறுவர்களின் உடலில்  உயர் செயல்திறனை பன்மடங்கு அதிகரிப்பதாகவும் இதனால் சிறுவர்கள், கல்வி விளையாட்டு என அனைத்து விடயங்களிலும் அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X